நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீதனை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியது. மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள உருவங்கள் மற்றும் மலர் கண்காட்சி சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.
உதகை தாவரவியல் பூங்கா செல்லும் வழி முழுவதும் ஆங்காங்கே கவுண்டர்கள் அமைக்கப்பட்டு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் நுழைவு வாயில் அடுத்து மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில்கள் பார்ப்பதற்கு வண்ண வண்ண பூக்களால் அழகிய காட்சி அளித்து வருகிறது.
125 மலர் கண்காட்சி என்ற வாசகம் முற்றிலுமாக மலர்களை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது பின்னர் இந்திய வரைபடம் மற்றும் யானை உள்ளிட்டவை இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொட்டிகளில் அழகான வண்ண வண்ண மலர்கள் மற்றும் 125 நாடுகளின் தேசிய மலர்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாம்பு பிடிப்பதில் வல்லவரான மதுரை பைக் மெக்கானிக் ‘Snake சகா’..!
மேலும் பார்வையாளர்களை கவரும் விதத்தில் வரையாடு, பட்டாம்பூச்சி மீண்டும் மஞ்சப்பை திட்டம் மேலும் சில வடிவங்களும் இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியின் முக்கிய அம்சமாக முற்றிலும் மலர்களால் காண தோகை விரித்தாடும் மயில் போன்ற வடிவம் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் என இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் பிடித்ததாக இருந்து வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக உதகை தாவரவியல் பூங்காவை தோற்றுவித்த திரு வில்லியம் கிரஹம் மெக் ஐவர் அவர்களின் உருவ சிலையும் இன்று புதிதாக திறக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris