முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் இந்த இடத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு..

ஊட்டியில் இந்த இடத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு..

X
ஊட்டி

ஊட்டி

Ooty : கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

மேலும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த கண்காட்சி நடத்துவதற்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் தோட்டகலைத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உதகையில் முக்கிய சுற்றுலா தளங்கள் ஒன்றான அரசு தாவரவியல் பூங்காவில் மே 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

பூங்காவை சீரமைக்கும் ஊழியர்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் பூங்கா ஊழியர்கள் பூங்காவைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளுக்கு நீர் பாய்ச்சுதல், புல் வெளிகளைச் சீரமைத்தல் மேலும் மலர்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ள புல்வெளிகளில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty