முகப்பு /நீலகிரி /

புத்தக பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.. ஊட்டி புத்தக கண்காட்சி தேதி நீட்டிப்பு!

புத்தக பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.. ஊட்டி புத்தக கண்காட்சி தேதி நீட்டிப்பு!

உதகை புத்தக கண்காட்சி

உதகை புத்தக கண்காட்சி

Ooty Book Fair| ஊட்டி புத்தகத் திருவிழா பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததால் இந்க கண்காட்சி மேலும் சில நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

ஊட்டியில்முதல் முறையாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவானது பல்வேறு பள்ளிக் கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது. கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவை எம்.பி. ஆ.ராசா துவக்கி வைத்தார் 14ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த புத்தகத் திருவிழா பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததால், 19ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறுபுத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பழமை வாய்ந்த புத்தகங்களும் இங்கு அமைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், பதிப்பாளர்கள், மாணவ-மாணவிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த புத்தக திருவிழாவை நீட்டிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று, நீலகிரிமாவட்ட நிர்வாகம் இந்த புத்தகத் திருவிழாவை வரும் 19ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும் என்பது புத்தகப் பிரியர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

First published:

Tags: Book Fair, Local News, Ooty