சர்வதேச சுற்றுலாத்தளமான உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுற்றுலா தளங்களை மட்டுமே கண்டு மகிழ்ந்து செல்லும் சுற்றுலா பயணிகள், யாரும் சென்றிடாத அறியப்படாத புதிய இடங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவதில்லை .
அந்த வகையில் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மரவியில் பூங்கா அனைவரும் அறிந்திடாத பெயராகவே இது நாள் வரையிலும் இருந்து வருகிறது. இந்த பூங்காவில் அப்படி என்ன இருக்கிறது தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பர்ன்ஹில் சாலையில் அமைந்துள்ள இந்த பூங்காவானது பெரும்பாலும் புதுமணத் தம்பதியினரின் புகைப்பட பூங்காவாகவே திகழ்ந்து வருகிறது . இந்த பூங்காவிற்கு மற்றும் ஒரு சிறப்பும் உண்டு . 1982 ஆம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த பூங்காவானது பல்வேறு வகையான குளிர் நிலவும் சீதோசன நிலையில் வளரக்கூடிய அறுபது வகையான அரிய வகை மரங்களை வைத்து உருவாக்கப்பட்டது .
பின்னர் போதிய பராமரிப்பு வசதிகள் இன்றி இந்த பூங்கா காணப்பட்டது, 2006 மற்றும் 2007 ஆண்டில் இந்த பூங்காவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு 14 லட்சம் ரூபாய் செலவில் இந்த பூங்கா மீண்டும் பராமரிக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பூங்காவில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு பத்து ரூபாயும் சிறியவர்களுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது .புகைப்பட கேமராவிற்கு 100 ரூபாயும் வீடியோ கேமராவிற்கு 200 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது . இந்தப் பூங்காவில் குளிர் சீதோசன நிலையில் வளரக்கூடிய 60 வரை மரங்கள் நடப்பட்டு தற்போது வரையில் பராமரிக்கப்படும் வருகிறது.
ALSO READ | உதகை சவுத்விக் பகுதி சாலை சேதம்.. பொதுமக்கள் அவதி!
மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஆங்காங்கே இருக்கைகள் மற்றும் கழிவறைகளும் அமைந்துள்ளது.நுழைவு வாயில் பக்கத்தில் உள்ள விற்பனை நிலையத்தில் நாற்றுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . குடும்பத்துடன் உதகை வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பூங்கா மேலும் ஒரு அனுபவத்தைத் தரக்கூடிய இடமாகவே அமைந்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ooty, Park, Tourist spots