முகப்பு /செய்தி /நீலகிரி / Video | உதகை ரோஜா கண்காட்சியில் படுகர் இசை நிகழ்ச்சி... குஷியாக நடனமாடிய மூதாட்டி..!

Video | உதகை ரோஜா கண்காட்சியில் படுகர் இசை நிகழ்ச்சி... குஷியாக நடனமாடிய மூதாட்டி..!

Udhagamandalam  | கூட்டத்தில் இருந்து அனைவருக்கும் சவால் விடும் வகையில் மூதாட்டி நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை அரசு ரோஜா பூங்காவில் நடந்து வரும் ரோஜா கண்காட்சியில் இன்று சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படுகர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மூதாட்டி ஒருவர் நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகை அரசு ரோஜா பூங்காவில் 18 வது ரோஜா கண்காட்சி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ரோஜா மலர்களைக் கொண்டு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சிகளை காணும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நிலா மாடத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இரண்டாம் நாளான இன்று படுகு மொழி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பேண்டு வாத்தியம் இசைக்கப்பட்டது. இதில் உற்சாகமடைந்த சுற்றுலாப் பயணிகள் படுகர் இன மக்களுடன் ஆட்டத்தில் கலந்து கொண்டு நடனம் ஆடினர். அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் குஷியாக நடனம் ஆடினார்.

' isDesktop="true" id="977693" youtubeid="7rtEgiyp--c" category="nilgiris">

மேலும் படிக்க... மனதை மயக்கும் ஊட்டி மலர் கண்காட்சி

சிறிது நேரம் கைப்பையை கையில் வைத்து ஆடியபடி இருந்த மூதாட்டி உற்சாகமடைந்து பையை நாற்காலியில் வைத்துவிட்டு மீண்டும் நடனமாடினார். கூட்டத்தில் இருந்து அனைவருக்கும் சவால் விடும் வகையில் மூதாட்டி நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

First published:

Tags: Nilgiris