முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் செயல்படாத டிராஃபிக் சிக்னல்கள்.. வாகன ஓட்டிகள் சிரமம்!

ஊட்டியில் செயல்படாத டிராஃபிக் சிக்னல்கள்.. வாகன ஓட்டிகள் சிரமம்!

X
உதகை

உதகை ட்ராபிக் சிக்னல்கள்

Ooty traffic | ஊட்டியில் செயல்படாமல் இருக்கும் டிராஃபிக் சிக்னல்கள், எப்போது உபயோகத்திற்கு வரும் என வாகன ஓட்டிகளும், உள்ளூர் மக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

வாகன நெரிசலை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தவும், விபத்து ஏற்படாமல் தடுக்கவும், டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், ஊட்டியில் உள்ள பல டிராபிக் சிக்னல் கம்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் உபயோகமற்ற வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊட்டியில் உள்ள பிரதான வீதிகளான சேரிங்கிராஸ் முதல் உதகை மத்திய பேருந்து நிலையம் வரையிலும் பல்வேறு பகுதிகளில் டிராபிக் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் சேரிங்கிராஸ் சிக்னல் மட்டுமே உபயோகத்தில் இருந்து வருகிறது. உதகை கமர்சியல் சாலையில் அமைந்துள்ள சிக்னல்கள், மணிக்கூண்டு பகுதியில் அமைந்துள்ள சிக்கல்கள், மாரியம்மன் கோவில் மற்றும் மத்திய பேருந்து நிலையம் என ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிக்னல் கம்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் உபயோகமற்ற காணப்பட்டு வருகிறன.

இந்த சிக்னல்களை இணைப்பு கொடுத்து, உபயோகப்படுத்துவதன் மூலம் நகரின் பிரதான பகுதிகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

First published:

Tags: Local News, Ooty, Traffic