முகப்பு /நீலகிரி /

உதகையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு என்ன சிறப்பு?

உதகையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு என்ன சிறப்பு?

X
உதகை

உதகை புத்தக கண்காட்சி

Ooty Book Fair | உதகையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் ஏராளமான புத்தகப் பிரியர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி சென்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

சுற்றுலா தளமான ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெறும்  புத்தக கண்காட்சி உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் நல்ல ஆதரவு தந்து வருகின்றனர்.

பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்று துவக்கி வைத்த இந்த புத்தகத் திருவிழாவில், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புத்தக விற்பனை நிலையங்கள் ஸ்டால்களை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை ஏராளமான புத்தகப் பிரியர்கள் ஆர்வத்துடன் கண்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். மேலும், உதகையில் உள்ள படுகர் இன மக்களின் புதிய அகராதி புத்தகம் இங்கு  அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த புத்தகத்தில் சிறப்பு அம்சமாக இதில் தமிழ்,ஆங்கிலம், படுகா போன்ற மூன்று மொழிகளின் ஆக்கம் உள்ளதால், தமிழ் தெரிந்தவர்கள் படுகா மொழியை எளிதில் பயின்று கொள்ளவும், ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்கள் படுகா மற்றும் தமிழ் மொழியை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. எனவே இந்த வார விடுமுறையை உதகையில் செலவழிக்க நினைக்கும் சுற்றுலா பயணிகளும் இந்த புத்தக கண்காட்சியை கண்டும் பயன் பெறலாம்.

First published:

Tags: Book Fair, Local News, Ooty