முகப்பு /நீலகிரி /

Nilgiri Weather Update : ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அடித்து நொறுக்கிய மழை.. குஷியான சுற்றுலா பயணிகள்..

Nilgiri Weather Update : ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அடித்து நொறுக்கிய மழை.. குஷியான சுற்றுலா பயணிகள்..

X
ஊட்டியில்

ஊட்டியில் பெய்த மழை

Nilgiri Weather Update : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக   இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியதை முன்னிட்டு இங்கு நிலவும் காலநிலையை அனுபவிக்கவும் மேலும் தற்போது மலர் கண்காட்சி நடைபெறுவதால் மலர் கண்காட்சியைக் கண்டு ரசிக்கவும் உதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக இங்கு பகல் நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது . சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.நகரின் பிரதான சுற்றுலா தளங்களான உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களிலும் மழை பெய்தது.

ஊட்டியில் பெய்த மழை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சமவெளி பிரதேசங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இந்த கனமழையின் காரணமாக இதமான கால நிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty