நீலகிரியில் பயணச்சீட்டு காண்பிக்காததால் மூதாட்டி ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டத்தை எதிர்த்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதி பெற்றுள்ளார்.
நீலகிரி மாவட்டம் அருகே உள்ள மணிலாச் எனும் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்தாண்டு ஜூன் மாதம் கோவையில் இருந்து ஊட்டி-க்கு இயக்கப்படும் தமிழக அரசுப்பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது உதகை சேரிங் கிராஸ் பகுதியில் டிக்கெட் சோதனைக்காக அதிகாரிகள் சோதனை செய்தபோது இவர் பயணச்சீட்டு காண்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பயணச்சீட்டை காண்பிக்காததால் இவருக்கு அபராதமாக 500 ரூபாய் விதிக்கப்பட்டு அவரிடம் இருந்து அபராத தொகை ரூ.500 பெறப்பட்டுள்ளது. இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தொடர்ந்த வழக்கு மற்றும் இவ்வாறு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எந்த விதத்தில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பது குறித்த பார்ப்போம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கடந்த ஆண்டு கோவையில் இருந்து உதகை வந்த பயணி சேகர் என்பவருக்கு கோவையில் பயணசீட்டு கட்டணமாக 80 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அவர் பயணச்சீட்டு பெற்றுக் கொண்டு உதகை வரை பயணம் செய்துள்ளார்.பேருந்து உதகை வந்தவுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் அவர் வயது முதிர்வு காரணமாக பயணச்சீட்டு வைத்த இடத்தை மறந்துள்ளார்.
பின்னர் அதிகாரிகள் அவருக்கு அபராதமாக 500 ரூபாய் செலுத்துமாறு கூறியதை தொடர்ந்து அவர், அபராதம் செலுத்தி விட்டு பின்பு பார்த்தவுடன் அவர் பயணச்சீட்டை தனது பையில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதுகுறித்து அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளார். இருந்தாலும் அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததால் சேகர் இலவச சட்ட உதவி ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு சட்ட உதவி ஆலோசனை மையத்தின் உதவியுடன் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
வழக்கு விசாரணைக்கு வந்த பின்னர் அவருக்கு ஆறு மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .அதில் அபராதமாக செலுத்திய ரூ.500 திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்ற செலவாக ரூ.3000 வழங்க வேண்டும் என்றும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.25,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris