முகப்பு /நீலகிரி /

பிளாஸ்டிக் குப்பைகள் மூலம் மாதம் ரூ.50,000 வருமானம்.. அட இப்படிக்கூட ஒரு பிஸினஸ் இருக்கா?

பிளாஸ்டிக் குப்பைகள் மூலம் மாதம் ரூ.50,000 வருமானம்.. அட இப்படிக்கூட ஒரு பிஸினஸ் இருக்கா?

X
ப்ளாஸ்டிக்

ப்ளாஸ்டிக் மறுசுழற்சி

Plastic Recycling Business | நீலகிரியில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டிவருகிறார் இளைஞர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Neelagiri, India

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சுற்றுச்சூழலை காக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகத்திற்கு கொண்டு வரும் தொழிலை இளைஞர் செய்துவருகிறார்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்து கொட்டுவதன் மூலம் அதனை மறுசுழற்சி செய்து பயன்பெறலாம் எனவும் மேலும் பிளாஸ்டிக் ட்ரேக்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அரைத்து மீண்டும் உபயோகத்துக்கு கொண்டு வந்து லாபம் பெறுவதாக தெரிவிக்கிறார் நீலகிரியை சேர்ந்த விஷ்ணுவர்தன்.

ப்ளாஸ்டிக் மறுசுழற்சி

பிளாஸ்டிக் ஜூஸ், டின் பாட்டில்களை அரைத்து அதனை டீ சர்ட் வடிவில் கொண்டு வந்து உபயோகப்படுத்த முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் படித்த பட்டதாரி இளைஞர்கள் சுயதொழில் துவங்குவதற்கு விருப்பம் இருப்பின் அவர் உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்புகொள்ள  vishnu3020r15@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

First published:

Tags: Local News