முகப்பு /நீலகிரி /

பழங்கால இசையுடன் தொடங்கிய நீலகிரி பொக்கபுரம் கோவில் திருவிழா!

பழங்கால இசையுடன் தொடங்கிய நீலகிரி பொக்கபுரம் கோவில் திருவிழா!

X
பழங்கால

பழங்கால இசையுடன் தொடங்கிய நீலகிரி பொக்கபுரம் கோவில் திருவிழா

Nilagiri News : நீலகிரியில் மசினகுடி அருகே அமைந்துள்ள பொக்காபுரம் கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பழங்குடி மக்கள் இசையுடன் இந்த திருவிழா தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் ஒன்று தான் இந்த மசினகுடி அருகே அமைந்துள்ள பொக்கபுரம் கோவில் திருவிழா. 5 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் கலந்துகொண்டு திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவர்.

மலைகள் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவில் காண்பதற்கு மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.

திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருவிழாவை முன்னிட்டு பல பகுதிகளில் இருந்து சிறு வியாபாரிகள் வந்து இங்கு கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தனித்தனி டெண்டுகள் அமைத்து 5 நாட்கள் இங்கு நடைபெறும் திருவிழாவில் பங்கேற்றுசெல்வது வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பல நிகழ்ச்சிகள் நடைபெறும். பழங்குடியின மக்கள் இசையுடன் தொடங்குகிறது இந்த திருவிழா.

ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான இசையில் மனம் லயித்துபோகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் இந்த திருவிழா நாட்களில் சிறப்பு பேருந்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது உதகை கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக இங்கு 24 மணி நேரமும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலை அடிவாரம் என்பதால் காட்டு விலங்குகளின் அச்சம் காரணமாக போலீஸ் தொடர் ரோந்தில் ஈடுபடுவதாக திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Nilgiris