முகப்பு /நீலகிரி /

ஊசிமலை காட்சி முனை.. ஊட்டியில் இப்படி ஒரு இடமா..!!

ஊசிமலை காட்சி முனை.. ஊட்டியில் இப்படி ஒரு இடமா..!!

X
ஊசிமலை

ஊசிமலை காட்சி முனை

Ooty Needle Rock View Point : உதகையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகிய காட்சிமுனை. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது. உதகையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள் ஊசி மலை காட்சி முனை எனும் பகுதி. சுற்றிலும் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகளை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். குறிப்பாக கூடலூர் மாவட்டத்திற்கு அருகே அமைந்துள்ளதால் பெரும்பாலும் கேரளா மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.

இருப்பினும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டதிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த சுற்றுலா தலமானது பரிட்சையம் இல்லாமல் இருந்து வருகிறது. உதகை பைக்காரா வழியாக பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இந்த பாதை ஒர் புதிய அனுபவமாக அமையும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது சிறப்பான அனுபவமாக அமையும்.

இந்த சுற்றுலா தளத்தில் நுழைவு கட்டணமாக 20 ரூபாயாக வசுலிக்கப் படுகிறது. குழந்தைகளுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிரது. மேலும் இந்த காட்சி முனையானது 360° பார்வை கொண்டது.

இந்த காட்சி முனையின் பார்வை நேரம் ஆனது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

First published:

Tags: Local News, Nilgiris, Travel