முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் வலம் வந்த ஜொ்மன் ஷெப்பர்டு, டாபா்மேன்.. பார்வையாளர்களை கவர்ந்த நாய் கண்காட்சி..

ஊட்டியில் வலம் வந்த ஜொ்மன் ஷெப்பர்டு, டாபா்மேன்.. பார்வையாளர்களை கவர்ந்த நாய் கண்காட்சி..

X
ஊட்டி

ஊட்டி நாய் கண்காட்சி

Ooty Dog Show | நீலகிரி மாவட்டம் உதகையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியதையடுத்து ஏராளமான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சவுத் ஆஃப் இந்தியா கேனல் கிரேட் இந்தியன் கிளப் ஆஃப் சவுத் சார்பில்,செயலாளர் கலைவாணி அவர்கள் சார்பில் நாய் கண்காட்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடுவர் பிலிப் ஜான் கலந்து கொண்டு வெற்றிகளை நிர்ணயித்தார். மேலும் இங்கு பல்வேறு வகையான அரிய வகை நாய்கள் இருந்தது. கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, மும்பை, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து, நாய் வளர்ப்போர் தங்களின் நாய்களை போட்டிகளுக்கு அழைத்து வந்தனர்.

ஊட்டி நாய் கண்காட்சி

ஜொ்மன் ஷெப்பர்டு, டாபா்மேன், ராட்வீலா், கோல்டன் ரீட்ரீவர், சைபீரியன் ஆஸ்கி, பீகில், பெல்ஜியம் செப்பர்டு, சிட்சூ உள்ளிட்ட பல நாய்கள் போட்டிகளின் பங்கேற்றுள்ளன. நாய்களை ஆங்காங்கே குடில்கள் அமைத்து தயார் செய்து போட்டிகளில் கலந்து கொள்ள செய்தனர். சுற்றுலா பயணிகள் குழந்தைகள் மற்றும் உள்ளூர் மக்களையும் வெகுவாக இப்போட்டி கவர்ந்துள்ளது.

மேலும் நாய்களை பார்ப்பது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் போட்டி நடத்தும் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த போட்டிகளில் வெற்றிபெரும் நாய்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளும் வழங்கப்படவுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Nilgiris