நீலகிரி மாவட்டம் ஊட்டியில் படமாக்கப்பட்ட திரைப்படங்கள் மீண்டும் திரையில் ஒளிபரப்பப்பட்டது.
மலைகளின் ராணி என கொண்டாடப்படும் ஊட்டிக்குப் பல பெருமைகள் உண்டு.அந்த வகையில் உதகையில் கோடை விழாவின் ஒரு அங்கமாக உதகை அசெம்பிளி திரையரங்கில் உதகையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகிறது .
இந்த திரைப்படங்களை பார்ப்பதற்கு 100 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது ஒன்றுக்கு 3 காட்சிகள் வீதம் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. அந்த வகையில்
18- 05- 2023 காலை 11 மணிக்கு லேசா லேசா திரைப்படம் 2:30 மணிக்கு உன்னை கொடு என்னை தருவேன் திரைப்படம் மாலை 6 மணிக்கு ஆஸ்கர் விருது பெற்ற எலிபன்ட் எக்ஸ்பிரஸ் திரைப்படம் திரையிடப்பட்டது.
19 - 5 - 2023 அன்று காலை 11 மணிக்கு பொன்மகள் வந்தாள் மதியம் 2:30 மணிக்கு மூன்றாம் பிறை, மாலை 6:00 மணிக்கு புதிய பறவை திரைப்படங்கள் திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று (20;05:2023) 11:00 மணிக்கு நடிகன் திரைப்படமும், 2:30 மணிக்கு சச்சின் திரைப்படமும் மாலை 6 மணிக்கு மின்சார கனவு திரைப்படமும் திரையிடப்பட உள்ளது.
நாளை (21;05;2023) அன்று காலை 11 மணிக்கு புதையல் திரைப்படம் மதியம் 2:30 மணிக்கு தெய்வத்திருமகள் திரைப்படம் மாலை 6:00 மணிக்கு துருவங்கள் பதினாறு திரைப்படம் திரையிடப்பட உள்ளது. நாளை மறுநாள் (22 - 05 - 2023) 11 மணிக்கு யார் நீ திரைப்படமும் 2:30 மணிக்கு துடிக்கும் கரங்கள் திரைப்படமும் 6 மணிக்கு காதலிக்க நேரமில்லை திரைப்படமும் திரையிடப்பட உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் 23;05;2023 அன்று 11 மணிக்கு ராம் லட்சுமணன் திரைப்படமும் 2:30 மணிக்கு உள்ளத்தை அள்ளித்தா திரைப்படமும் 6:00 மணிக்கு நல்ல நேரம் திரைப்படமும் திரையிடப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மீண்டும் தங்கள் திரை அனுபவத்தை கண்டு மகிழலாம் என திரையரங்க மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris, Ooty