முகப்பு /செய்தி /நீலகிரி / சுற்றுலாப் பயணிகளுக்கு குட்நியூஸ்....மேட்டுப்பாளையம் - உதகை சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்...

சுற்றுலாப் பயணிகளுக்கு குட்நியூஸ்....மேட்டுப்பாளையம் - உதகை சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்...

சிறப்பு மலை ரயில்

சிறப்பு மலை ரயில்

மேட்டுப்பாளையில் கோடைக்கால சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயக்கப்படும் கோடைக் கால சிறப்பு மலை ரயிலின் சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் நாள்தோறும் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10-க்கு புறப்படும் மலை ரயில், மறுமார்க்கமாக உதகையில் பிற்பகல் 2 மணிக்கு திரும்பும்.

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க, உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், கோடை விடுமுறைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகச் சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வருகின்ற ஜூன் 25 ம் தேதி வரை சனிக்கிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. காலை 9.10-க்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு மலை ரயில், பிற்பகல் 2.25-க்கு உதகையைச் சென்றடையும். மீண்டும் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.25-க்கு உதகையில் கிளம்பும் ரயில், மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். அதன்படி, சிறப்பு மலை ரயில் சேவை இன்று தொடங்கியது. அப்போது, பயணிகளுக்கு ரயில்வே துறை சார்பில் சாக்லெட், பிஸ்கட் மற்றும் பழச்சாறு அடங்கிய பரிசுப் பை இலவசமாக வழங்கப்பட்டது.

Also Read : ஊட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு பகுதி நேர வருமானத்தை வழங்கும் டோல் இசைக்குழு..!

சிறப்பு மலை ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணிப்பதற்கான கட்டணம் 1,575 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 1,065 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டதற்கு உள்ளூர் மட்டும் இன்றி வெளிநாட்டுப் பயணிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Mettupalayam, Ooty, Train