முகப்பு /நீலகிரி /

சுற்றுலாதலமான உதகையில் மிகவும் விமரிசையாக நடைபெற்ற மாரியம்மன் தேர் பவனி..

சுற்றுலாதலமான உதகையில் மிகவும் விமரிசையாக நடைபெற்ற மாரியம்மன் தேர் பவனி..

X
மாரியம்மன்

மாரியம்மன் கோவில் சித்திரை தேர் பவனி

நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலின்  தேர்பவனி நிகழ்ச்சி நடைபெற்றது.  பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வீதி உலா செல்லும் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏரளமான மக்கள் கலந்து கொண்டனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

உதகையில் பிரசித்த பெற்ற கோவிலான மாரியம்மன் கோவில் கடந்த மார்ச் மாதம் 17 - ஆம் தேதி காப்பு கட்டுடன் நிகழ்வுடன் தொடங்கியது . ஒரு மாதமாக நடைபெற்ற இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும், அம்மன் ஒவ்வொரு ரூபத்தில் அவதரித்து வீதி உலா வந்து மீண்டும் கோவிலை சென்றடைவது வழக்கம்.அந்த வகையில் தேர்பவனியின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தேரைக் வடம் பிடித்து இழுத்து வீதி உலா செல்லும் நிகழ்வு (18 4 2023) இன்று நடைபெற்றது .

காலை முதலே நடைபெற்ற சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகளில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். சாரியாக மதியம் 1.55 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஊட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் கலந்து கொண்டார். முன்னதாக தேர், பவனி வரும் முன் அம்மனை அலங்காரம் செய்து கோவிலை சுற்றி தோள் மீது தூக்கி சுமந்து சென்று பின்னர் தேரில் வைத்தனர்.

top videos

    இரவு முழுவதும் நடைபெறும் இந்த தேர் பவனியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் நடைபெறும் சமயங்களில் சுற்றுலா நகரமான உதகை விழா கோலம் கொண்டிருந்தது.

    First published:

    Tags: Local News, Nilgiris