முகப்பு /நீலகிரி /

உதகையில் களைகட்டும் சிவராத்திரி விழா.. காந்தல் துளசி மடம் சிவன் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

உதகையில் களைகட்டும் சிவராத்திரி விழா.. காந்தல் துளசி மடம் சிவன் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

X
உதகையில்

உதகையில் களைகட்டும் சிவராத்திரி விழா

Maha Shivarathri 2023 | விழாக்கோலமாக காட்சியளிக்கும் உதகை துளசிமடம் கோவில்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் சிறப்பு அபிஷேகங்கள்,கலைநிகழ்ச்சிகளுடன் சிவன் ராத்திரி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவில் பக்தர்களால் துளசி மடம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் சிவனுக்கு உகந்த தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் சிவராத்திரியை முன்னிட்டு துளசி மடம் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விழாவில் உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பக்தர்களும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் மற்றும் இரவு முழுவதும் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று சிவன் ராத்திரியில் இரவு முழுவதும் தூங்காமல் கடைபிடிக்க உள்ளனர். மேலும் இக்கோயிலில் அமைந்துள்ள பல்வேறு சுவாமிகள் கொண்ட சன்னதிகள் மற்றும் ஜீவ சமாதி பீடங்களை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு வணங்கி செல்கின்றனர். மேலும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதி கோலாகலமாக காட்சியளித்து வருகிறது.

First published:

Tags: Local News, Maha Shivaratri, Nilgiris