முகப்பு /நீலகிரி /

நீலகிரியின் தொன்மையை அறிந்து கொள்ள விருப்பமா? உங்களுக்கு அருமையான வாய்ப்பு..

நீலகிரியின் தொன்மையை அறிந்து கொள்ள விருப்பமா? உங்களுக்கு அருமையான வாய்ப்பு..

X
நீலகிரி

நீலகிரி

Heritage of Ooty : 1824 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜான் சலீவன் அவர்களால் வெளி உலகத்திற்கு பிரபலப்படுத்தப்பட்ட நீலகிரி மாவட்டம் தற்போது 200 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது .

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் 200 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் நீலகிரியின் தொன்மையை சுற்றுலா பயணிகள் அறிந்துக்கொள்ள மரபு வழி நடைப் பயணத்திற்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதில் தொன்மையான கட்டிடங்கள் மற்றும் கட்டிடக்கலையை பற்றி சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளலாம்.

1824 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜான் சலீவன் அவர்களால் வெளி உலகத்திற்கு பிரபலப்படுத்தப்பட்ட நீலகிரி மாவட்டம் தற்போது 200 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது . இதனைக் கொண்டாடும் வகையில் உதகையில் உள்ள ஒரு சில பழங்கால கட்டிடங்கள் மற்றும் முக்கிய பாரம்பரிய சுற்றுலா தளங்களுக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரை எல்லா ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை மரபு வழி நடைப்பயணம் அழைத்துச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுலா அலுவலர் திரு.உமா சங்கர் மேலும் தெரிவிக்கையில் “நடைப்பயணம் ஆனது உதகை அரசு கலைக்கல்லூரி, ஆதாம் நீரூற்று, அசெம்பிளி திரையரங்கம், பிரிட்ஜ் பள்ளி, நீலகிரி லைப்ரரி, மாவட்ட நீதிமன்றம், ஸ்டீபன் தேவாலயம், மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மரபு வழி நடைப் பயணத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் சுற்றுலா அலுவலகம் உதகமண்டலத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைப்பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 16,23,30,07,14,21, மற்றும் 28 ஆகிய ஏழு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிக்கு உதகை அரசு கலைக்கல்லூரியில் இருக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

top videos
    First published:

    Tags: Local News, Nilgiris