முகப்பு /நீலகிரி /

நீலகிரி மாவட்டத்தில் நிலங்கள் விற்பனை செய்ய இணையதளம் அறிமுகம்..

நீலகிரி மாவட்டத்தில் நிலங்கள் விற்பனை செய்ய இணையதளம் அறிமுகம்..

மாதிரி படம்

மாதிரி படம்

WebSite For Land Sale | நீலகிரி மாவட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் உள்ள நிலங்கள் விற்பனை செய்ய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் உள்ள நிலங்களை இணையதளம் மூலம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தனியார் காடுகளை அழிப்பதை தடுக்கவும் நிலங்களில் மாற்றம் ஏற்படுவதை தடுக்கவும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.

தனியார் காடுகளை விற்பனை செய்வதற்கு மேற்கண்ட சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் கட்டாயம் அனுமதி பற்றி பெற வேண்டும் விற்பனைக்கு அனுமதி கூறும் விண்ணப்பங்களை http://Nilgiris.nic.in இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும் இந்த இணையதளம் ஆனது தற்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. விற்பனை செய்ய விரும்புவோர் இந்த இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்து பின்பு விண்ணப்பதாரர் விற்பனை செய்ய அனுமதி கூறியுள்ள நிலங்கள் குழு உறுப்பினர்களால் புலத்தணிக்கை செய்யப்பட்டு பரிந்துரைகளும் இணையம் வழியாக சமர்ப்பிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : வாகன ஓட்டிகளை பழிவாங்கும் குரங்கு.. என்ன காரணம் தெரியுமா?

பின்னர் மாவட்ட குழுவின் முன் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு. இறுதியாக விற்பனை செய்வதற்கு அனுமதிகளும் வழங்கப்படும் இவை அனைத்தையும் இணைய தளத்திலேயே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மேலும் இந்த உத்தரவினை விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த புதிய நடைமுறை மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது முதல் விற்பனை செய்வது வரை அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. பதிவு செய்து ஒரு மாத காலத்திற்குள் நிலங்களை விற்பனை செய்ய அனுமதியும் வழங்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அம்ரித் துவக்கி வைத்தார்.  மாவட்ட ஆட்சியருடன் சூப்பிரண்டு பிரபாகர், வன அலுவலர் கௌதம், வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Local News, Nilgiris