முகப்பு /நீலகிரி /

ஊட்டி மலை ரயிலில் பயணிக்க ஆசையா..! இந்த தகவல்களை எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

ஊட்டி மலை ரயிலில் பயணிக்க ஆசையா..! இந்த தகவல்களை எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

X
ஊட்டி

ஊட்டி மலை ரயில்

Ooty Mountain Train : நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பாரம்பரியமிக்க மலை ரயிலில் செல்ல ஆசையுள்ளவர்கள் கண்டிப்பாக இந்த தகவல்களை எல்லாம் தெரிஞ்சிவச்சிக்கோங்க.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் பயணிகளை கவரும் விதத்தில் அமைந்திருக்கின்றன. அந்த வகையில், ஊட்டி மலை ரயிலை கண்டு வியக்காத சுற்றுலா பயணிகள் இருக்க மாட்டார்கள். இந்த மலை ரயிலில் பயணம் செய்வது தனிச்சிறப்பு வாய்ந்த அனுபவமாகவே கருதப்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்லக்கூடிய மலை ரயிலை, ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மூலம் பதிவு செய்ய முடியும். அதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு MTP To UAM அதாவது உதகமண்டலம் எனவும் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது, மலைகளின் நடுவே 4:45 மணி நேரம் பயணித்து, கண்களுக்கு பசுமை நிறைந்த இயற்கையை விருந்தளித்து, உதகை வந்து அடைகிறது. இந்த ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்வதற்கு முதல் வகுப்பிற்கான கட்டணமாக 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சாதாரண நடப்பு விலை பட்டியலாக மேட்டுப்பாளையம் வரை செல்வதற்கு 295 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஊட்டி மலை ரயில்

உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கு நாள் ஒன்றுக்கு ஒரு ரயிலும், உதகையிலிருந்து குன்னூர் வரை செல்வதற்கு நாள் ஒன்றுக்கு மூன்று ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.  உதகைக்கு ரயிலில் வர விரும்பும் பயணிகள் இவற்றை தெரிந்து கொண்டு பாராம்பரியமிக்க மலை ரயிலில். ரம்யமாக பயணித்து, எப்போதும் அசைபோடும் பசுமையான நினைவுகளை சேமித்து என்ஜாய் பண்ணுங்க.

First published:

Tags: Local News, Nilgiris, Ooty, Travel