முகப்பு /நீலகிரி /

உதகையில் வெளுத்து வாங்கிய கனமழை : சுற்றுலா பயணிகள் அவதி

உதகையில் வெளுத்து வாங்கிய கனமழை : சுற்றுலா பயணிகள் அவதி

X
உதகை-கோத்தகிரி

உதகை-கோத்தகிரி சாலையில் கனமழை

உதகை மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை பெய்ததால், திட்டமிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்லமுடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கருமேகத்துடன் கனமழை கொட்டி தீர்த்தது சாலை எங்கும் மழைநீர் தேங்கியதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலைகளுக்கு ஒரு புறத்தில் வெயிலும் மற்றொரு புறத்தில் கருமேகம் சூழ்ந்து பலத்த மழையும் கொட்டி தீர்த்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுபோல பலத்த மழை கொட்டி தீர்க்கும்பொழுது சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்த்து மகிழ முடியாத சூழ்நிலையும் இருந்து வருகிறது.

மேலும் ஒரு சுற்றுலா தளத்திலிருந்து மற்றொரு சுற்றுலா தலத்திற்கு செல்ல முடியாததால், சுற்றுலா பயணிகள் அதிருப்த்தியும் அடைந்து வருகின்றனர். இருப்பினும் இந்த காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து செல்கின்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Ooty