முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் மயில்களை பார்த்து இருக்கீங்களா? ஆச்சரியத்தில் உள்ளூர் மக்கள்!

ஊட்டியில் மயில்களை பார்த்து இருக்கீங்களா? ஆச்சரியத்தில் உள்ளூர் மக்கள்!

மயில்கள்

மயில்கள்

Ooty peacock | பொதுவாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காண கிடைக்காத மயில்களை உள்ளூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

ஊட்டியில் மயிலை பார்த்து இருக்கீங்களா, இங்கே மயில் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான். உள்ளூர் மக்கள் கூட அதிமாக பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால், இந்த பகுதிக்கு சென்றால் உலாவருவதைப் பார்க்க முடியும்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் தட்பவெட்ப நிலையில், மயில்களை பார்ப்பது அரிது. சமவெளி பகுதிகளில் மட்டுமே மயில்களை அதிகமாக பார்க்கலாம். இந்நிலையில், நீலகிரியில் உள்ள மசினகுடி முதுமலை ஏன் கூடலூர் பகுதிகளில் கூட மயில்களை பார்க்கலாம். ஆனால் உதகை குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் மயில்களை பார்ப்பது அரிது.

இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள காட்டேரிவில்லேஜ், நடுஹட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அதிக அளவு மயில்களை காலை நேரங்களில் வீட்டுக் கூறையின் மேலும், விளை நிலங்களிலும் தென்படுகின்றன

top videos

    இந்த மயில்கள் விளை நிலங்கலுக்குள் சென்று விளை நிலங்களை சேதப்படுதுவதாக இப்பகுதி விவசாய மக்கள் கூறுகின்றனர்.ஆயினும், உதகை மற்றும் குன்னூர் பகுதிகளில் மயில்கள் தென்படுவது சற்று அதியசயமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இனி ஊட்டிக்கு வரும் மக்கள் இந்த பகுதிகளில் மயில்களை பார்த்து ரசிக்கமுடியும்.

    First published:

    Tags: Local News, Ooty