முகப்பு /நீலகிரி /

மலை உச்சியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்.. ஊட்டி காட்டுப்பகுதிக்குள் ஒரு த்ரில் பயணம்..

மலை உச்சியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்.. ஊட்டி காட்டுப்பகுதிக்குள் ஒரு த்ரில் பயணம்..

X
ஊட்டியில்

ஊட்டியில் ஒரு த்ரில் பயணம்

Nilgiris News | ஊட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஒரு பயணம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான மலை கோவில்கள் அமைந்துள்ளன. பெரும்பாலும் மலை கோவில்களுக்கு பக்தர்களின் வரத்து குறைந்தே காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை - குன்னூர் சாலையில் அமைந்துள்ள வாலே வியூ(Valley View) எனும் பகுதியில் மலை உச்சியில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழி முழுவதும் வனப்பகுதி என்பதால் கோவிலுக்கு செல்லும் பாதை கரடு, முரடாகவே காட்சியளிக்கிறது.

மேலும் வழி முழுவதும் ஆஞ்சநேயர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. கரடு, முரடான இந்த சாலையில் இருபுறமும் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் கோவிலுக்கு செல்லும் பயணம் மிகவும் திகிலாக செல்லக்கூடிய பயணமாகவே அமைந்திருக்கும். வார நாட்களில் இங்கு பூஜைகள் நடைபெறாமல் இருப்பதால் பெரும்பாலும் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. வாரத்தில் சனிக்கிழமை மற்றும் மாதத்தின் அமாவாசை உள்ளிட்ட தினங்களின் மட்டுமே இங்கு பூஜைகள் நடைபெறுகிறது.

மலை உச்சியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்

மேலும் தடையை மீறி பக்தர்கள் செல்லக்கூடாது என்பதற்காகவும் வனக்கட்டுப்பாட்டில் உள்ளதால் எளிதில் தீ பற்றக் கூடிய காலநிலை உள்ளதாலும், இங்கு காவலுக்கு வனத்துறை சார்பில் ஆட்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனப்பகுதியில் தாண்டி கோவிலுக்கு சென்றால் மலைகளுக்கு நடுவில் கோவில் காட்சியளிப்பது பக்தர்களுக்கு மிகவும் ஆனந்தம் அளிக்க கூடியதாக அமைந்துள்ளது.

First published:

Tags: Local News, Nilgiris, Ooty