முகப்பு /செய்தி /நீலகிரி / "எங்க ஏரியா உள்ள வராதே" - கூடலூரில் வாகன ஓட்டிகளை விரட்டிய காட்டுயானைகள்!

"எங்க ஏரியா உள்ள வராதே" - கூடலூரில் வாகன ஓட்டிகளை விரட்டிய காட்டுயானைகள்!

வாகன ஓட்டிகளை துரத்திய யானை

வாகன ஓட்டிகளை துரத்திய யானை

Gudalur elephant | இந்த இடத்தை யானைகள் கடந்து செல்லும் என வைக்கப்பட்ட பலகை அருகே யானை குட்டியுடன் சாலையை கடந்து சென்றது.

  • Last Updated :
  • Gudalur, India

கூடலூரில் இருந்து நாடுகாணி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளை விரட்டிய காட்டு யானைகளின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் கேரளா செல்லும் சாலைகள் அடர்ந்த வனப்பகுதிகள் கொண்டுள்ளதால் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் நாடுகாணி சாலையில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே இங்குள்ள வனப்பகுதியில் இருந்து சாலையை கடக்க குட்டியுடன் தாய் யானை செல்லும்பொழுது பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சாலையில் நின்று இருந்தனர். அப்போது யானை அவர்களை துரத்தியது. உடனடியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களும் வேடிக்கை பார்த்தவர்களும் ஓட்டம் பிடித்தனர். பின்பு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

இதில் குறிப்பாக யானைகள் வனப்பகுதியை கடக்கும் பகுதி என பெயர் பலகை வைக்கப்பட்ட இடத்தின் வழியாக குட்டியுடன் தாய் யானை வனப்பகுதிக்குள் சென்றது.

top videos

    செய்தியாளர்: ஐயாசாமி, நீலகிரி.

    First published:

    Tags: Elephant, Local News, Ooty, Viral Video