முகப்பு /நீலகிரி /

ஊட்டி தீட்டுக்கல் வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ..

ஊட்டி தீட்டுக்கல் வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ..

X
ஊட்டி

ஊட்டி தீட்டுக்கல் வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ

Nilgiris Forest Fire |  காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனப்பகுதிகளுக்குள் தீ ஏற்பட்டால் உடனடியாக 103 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல் அருகே உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத் துறையினர் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பெரும்பாலும் கோடை காலங்களில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. காட்டு தீயானது 2 வழிகளில் ஏற்படுகிறது. பெரும்பாலும் காட்டு தீ 90% செயற்கை மூலமாகவே ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் காட்டுத் தீயினால் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மனித வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயங்கள் ஏற்பட்டு வருகிறது.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் இவ்வாறு ஏற்படும் காட்டுத் தீயினால் பல்வேறு வகையான தாவரங்கள் உயிரினங்கள் அழியவும் வாய்ப்பு உள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனப்பகுதிகளுக்குள் தீ ஏற்பட்டால் உடனடியாக 103 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ பற்றி எரியும் இடத்தில் இருந்து எதிர்வரும் இடத்தை நோக்கி சற்று தொலைவில் பள்ளங்கள் தோண்டி தீயை கற்றுக் கொண்டு வரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Nilgiris