நீலகிரி மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தொழில் கேரட் அறுவடை. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய கேரட் அறுவடையின் பின்னணியில் ஏராளமான தொழிலாளர்களின் உழைப்பு குறித்த செய்தி தொகுப்பு..
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிக அளவு மலை காய்கறிகளின் விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரட் விவசாயம் பெரும்பான்மையான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரட் விவசாயம் செய்வது ஒருமுறை என்றாலும், அதை அறுவடை செய்து கொள்முதல் மண்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது முற்றிலும் மாறுபட்ட முறையாகவே காணப்பட்டு வருகிறது. உதகை நகர்ப்பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு ஏடிசி பகுதிகளில் அதிகாலை 2 மணி முதல் 7 மணி வரையிலும் தொழிலாளர்கள் அறுவடைக்கு தயார் இருக்கின்றனர்.
தங்களது நிலங்களில் கேரட் அறுவடை செய்ய நினைக்கும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான தொழிலாளர்களே இங்கு வந்து லாரிகள் மூலம் கூட்டி செல்வர் லாரிகள் மூலம் சென்ற தொழிலாளர்கள் விவசாய நிலங்களில் இறங்கி கேரட் அறுவடையை தூங்குவார்கள். ஒரு ஆண் தொழிலாளி ஒரு பெண் தொழிலாளி என பிரிந்து வேலை செய்ய துவங்குவார்கள். ஆண் தொழிலாளி மண்ணில் விதைக்கப்பட்ட கேரட்டுகளை அறுவடை செய்து அடுக்கி வைத்துவிட்டு முன் செல்வார் தொழிலாளி அவர் பின்னால் அறுவடை செய்யப்பட்ட கேரட் இலைகள் மற்றும் வளர்ச்சி குறைந்த கேரட்டுகளை தனித்தனியாக ரகம் பிடித்து அடுக்கி வைப்பார்.
இதையடுத்து, மொத்தமாக முடிந்த பிறகு அடுக்கி வைக்கப்பட்ட கேரட்டுகள் மூட்டைகளாக பிரிக்கப்பட்டு சுத்திகரிப்புக்காக கேரட் சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்பட்ட கேரட்டுகள் இயந்திரங்களில் கொட்டப்பட்டு முற்றிலும் நீரின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் தனித்தனியாக பிரிந்து உள்ள தொழிலாளர்கள் கேரட்டுகளை ரகம் பிடித்து மூட்டைகளில் சேகரித்து பின்னர் சென்னை, மேட்டுப்பாளையம், திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் கேரட்டுகளுக்கு அங்கு விலை நிர்ணயிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris