சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள படகு இல்லம் மிகவும் பிரபலமான ஒரு சுற்றுலா தலம். 1824ல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கு செய்வதற்கு ஏற்ற இடமாகும். அமைதியான நீர், ஏரியில் இருந்து தொடர்ந்து வீசும் குளிர்ச்சியான காற்று, வெண்பனி கூட்டம்மற்றும் அழகிய நிலப்பரப்பு ஆகியவற்றில் மனதை தொலைக்காதவர்கள் யாரும் இல்லை.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வரும் அனைவரும் விரும்பி செல்ல கூடிய படகு இல்லத்தை ரசித்த நாம் அங்கு படகுகளை செலுத்தும் தொழிலாளர்களை கவனிப்பதில்லை. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கோடை காலங்களில் மட்டும் தான் தங்களுக்கு வேலை இருப்பதாகவும் மற்ற 6-7 மாதங்கள் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் திண்டாடுவதாக தெரிவித்தனர்.
துடுப்பு படகுகளை இயக்கும் தொழிலாளர்கள் ஒரு முறை அரை கிலோ மீட்டர் தூரம் படகுகளை இயக்குவதற்கு 75 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும், கோடை சீசன் சமயங்களில் மட்டுமே தொழில் நன்றாக இருப்பதாகவும் மற்ற சமயங்களில் மிகவும் சிரமப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுதொடர்பாக சுற்றுலா துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், தங்களுக்கு மாத வருமானம் கிடைக்கும்படி நடவடிக்கைகள் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். அதேபோல் இந்த படகுகளை தொடர்ந்து இயக்குவதால் தங்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris, Ooty