முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் செம கிளைமேட்... சாரல் மழை... இப்போ கிளம்புங்க - என்ஜாய் பண்ணுங்க!

ஊட்டியில் செம கிளைமேட்... சாரல் மழை... இப்போ கிளம்புங்க - என்ஜாய் பண்ணுங்க!

X
ஊட்டி

ஊட்டி

Nilgiris News| ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் இதமான சாரல் மழை பெய்தது. சாரல் மழையை ரசித்தப்படி ஊட்டியின் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இரவு நேரங்களில் பனியின் தாக்கமும், பகல் வேளையில் இதமான வெயிலும் நிலவியது. இதனால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் குறையத் தொடங்கியது. இதற்கிடையில், வழக்கத்திற்கு மாறாக, பகல் நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் ஒரு சில பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனால், வார இறுதி நாட்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கிறது. தற்போது ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றிப்பார்த்து வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, Nilgiris