முகப்பு /நீலகிரி /

நாட்டு நாய்களுக்கு இவ்வளவு குணங்கள் உள்ளதா..! ஊட்டியில் நாய் உரிமையாளர்கள் கூறிய சுவாரஸ்ய கருத்து..!

நாட்டு நாய்களுக்கு இவ்வளவு குணங்கள் உள்ளதா..! ஊட்டியில் நாய் உரிமையாளர்கள் கூறிய சுவாரஸ்ய கருத்து..!

X
நாட்டு

நாட்டு நாய்கள்

Ooty Dog Show : உதகையில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் நாட்டு இன நாய்களும் பங்கேற்றது. இந்த நாட்டு இன நாய்கள் பற்றி உரிமையாளர்கள் கூறும் கருத்து என்ன என்பது குறித்து பார்க்கலாம்

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பல்வேறு வகையான நாய்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இருப்பினும் நாட்டு நாய்களாக கருதப்படும் ராஜபாளையம் சிப்பிப்பாறை, கோம்பன் உள்ளிட்ட பல்வேறு வகையான நாய்கள் இங்கு பார்வையாளர்களை கவர்ந்தது. நாட்டு நாய்களை வளர்ப்பதில் தற்போதுள்ள நாய் வளர்ப்பவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு காலத்தில் வேட்டை மற்றும் போர்களுக்கு கூட பயன்படுத்தப்பட்ட இந்த நாய்கள் அழிந்து வரும் நிலையில் இருந்தது. தற்போது பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் அவைகளை மீட்டெடுத்து பயிற்சி கொடுத்து பல்வேறு கண்காட்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்க செய்கின்றனர்.

ஊட்டி நாய் கண்காட்சி

அவை வெற்றியும் பெறுகிறது. மற்ற நாய்களைக் காட்டிலும் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும் திறன் கொண்ட இந்த நாட்டு நாய்களுக்கு மோப்ப சக்தி குறைவாக இருந்தாலும் பார்வை திறன் அதிகமாக இருக்கும் சமீப காலமாக பல்வேறு திரைப்படங்களில் கூட இந்த வகையான நாய்களின் திறன் குறித்தும் இடம் பெற்றுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    குறிப்பாக பரியேறும் பெருமாள் மற்றும் அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிப்பிப்பாறை நாய்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நாட்டு நாய்களை வளர்ப்பதில் பெரிய அளவிலான பராமரிப்பு செலவு ஏதும் இல்லை எனவும் நாய் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Nilgiris