முகப்பு /நீலகிரி /

தூள் கிளப்பும் ஊட்டி காபி தூள்.. எப்படி தயாரிப்பாங்க தெரியுமா?

தூள் கிளப்பும் ஊட்டி காபி தூள்.. எப்படி தயாரிப்பாங்க தெரியுமா?

X
மாதிரி

மாதிரி படம்

Ooty coffee | நீலகிரி மாவட்டம் உதகையில் அதிக அளவில் தேயிலை, மலை காய்கறிகள் அதிக அளவு அனைவராலும் அறியப்பட்ட விவசாயமாக இருந்து வருகிறது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகையில் அதிக அளவில் தேயிலை, மலை காய்கறிகள் அதிக அளவு அனைவராலும் அறியப்பட்ட விவசாயமாக இருந்து வருகிறது. இதனைத் தவிர்த்து கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காபி, மிளகு உள்ளிட்டவையும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறன. இவற்றுள் பலரும் விரும்பி அருந்தக்கூடியதாக இருந்து வருகிறது காபி.

காபி விதைகள் வருடத்திற்கு ஒருமுறை அறுவடை செய்யப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் மர நிழல்களில் மட்டுமே பயிரிடப்பட்ட காபி செடிகள், பின்னர் விரிவுபடுத்தப்பட்டு, பல்வேறு விவசாயிகள் உற்பத்தி முறையை மாற்றி சூரிய ஒளி சாகுபடியாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. அதன்ன்படி, நன்கு முற்றிய காபி காய்கள் கையால் பறிக்கப்படுகிறது, பறிக்கப்பட்ட காபி காய்கள் நன்கு காய வைக்கப்படுகிறன. பின்னர் தோல் நீக்கப்பட்டு, தரம் பிரித்து, அரைக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

top videos

    அங்கே, பல்வேறு இயந்திரங்களைக்கொண்டு முதலில் காபி விதைகளை இயந்திரம் மூலம் பதமாக வறுக்கப்படுகின்றன. அதன் பின்னர் வறுக்கப்பட்ட காபி விதைகள் இயந்திரம் மூலம் அரைத்து காபி பொடியாக மாற்றப்பட்டு, தேவையான பொருட்களை சேர்த்து, அதன்பின்னர் பேக்கிங் செய்து விற்பனைக்கு தயாரிகிறது.

    First published:

    Tags: Coffee, Local News, Ooty