முகப்பு /நீலகிரி /

உதகையில் தங்கும் விடுதிகளின் பெயரில் நடக்கும் மோசடி..!

உதகையில் தங்கும் விடுதிகளின் பெயரில் நடக்கும் மோசடி..!

X
மாதிரி

மாதிரி படம்

Cyber Crime Awareness | வெளியூர் சுற்றுலா செல்லும் மக்களுக்கு ஊட்டி சைபர் கிரைம் போலீசார் சொன்ன முக்கிய ஆலோசனைகள்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் இன்று அதிக அளவு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு கூடும் இடங்களில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.

உதகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தங்கும் விடுதிகளை ஆன்லைனில் புக் செய்வது தொடர்பாக மோசடி நடந்துள்ளது. இதுபோன்ற மோசடிகளை தடுக்க சைபர் கிரைம் போலீசார் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சைபர் கிரைம்

மேலும் சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், செல்போன் காணமல்போனால் உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Nilgiris, Ooty