முகப்பு /நீலகிரி /

ஊட்டி தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர இதுதான் காரணம்..!

ஊட்டி தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர இதுதான் காரணம்..!

X
ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்கா

Ooty Botanical Garden | உதகை வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை காணாமல் செல்வது கிடையாது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நூற்றாண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் உதகை அரசு தாவரவியல் பூங்கா 1847ம் ஆண்டு கிரகாம் மக்கில்வோர் என்பவரால் நிறுவப்பட்டது. இப்பூங்கா ஆரம்ப காலங்களில் காய்கறிகளை உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. பின் நாட்களில் பூங்காவாக மாறியது. இந்த தாவரவியல் பூங்காவில் பல்வேறு வெளிநாட்டு மரங்கள், செடிகள், கொடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பூங்காவினுள் கிளை பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தாலியன் பூங்கா, கல்லாகிய மரம், இந்திய வரைபடம், உள்ளிட்டவை பார்வையாளர்களை கவரும் பல்வேறு இடங்கள் இங்கு அமைந்துள்ளது.

மேலும் இப்பூங்காவில் அமைந்துள்ள தட்பவெட்ப நிலையானது வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். உதகை வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை காணாமல் செல்வது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Nilgiris