முகப்பு /நீலகிரி /

ஊட்டி சாலைகளில் ஹாயாக சுற்றும் கால்நடைகள்.. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி..

ஊட்டி சாலைகளில் ஹாயாக சுற்றும் கால்நடைகள்.. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி..

X
ஊட்டி

ஊட்டி சாலைகளில் ஹாயாக சுற்றும் கால்நடைகள்

Ooty : உதகை நகர் பகுதியில்  சாலைகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியதை முன்னிட்டு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை புரிந்து வருகின்றனர். மேலும் நகரின் பிரதான வீதிகளில் அவ்வப்போது கடும் வாகன நெரிசல் நிலவி வருகிறது.

இந்நிலையில், வாகன நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் விதமாக உதகையில் உள்ள மெயின் பஜார், ஏடிசி மார்க்கெட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் சாலையில் கால்நடைகளின் எச்சங்களும் அதிக அளவு காணப்பட்டு வருவதால் உள்ளூர் வாசிகள் முகம் சுளிப்பது மட்டுமல்லாமல் விபத்துகள் ஏற்படும் அபயாமும் உள்ளது.

ஊட்டி சாலைகளில் ஹாயாக சுற்றும் கால்நடைகள்

மேலும் சாலையில் ஆங்காங்கே கால்நடைகள் ஒய்யாரமாய் படுத்துக் கொள்வதால் கடும் வாகன நெரிசல் நிலவி வருகிறது. சுற்றுலா தளங்களுக்கு அருகே நடமாடும் கால்நடைகள் அவ்வப்போது மிரண்டு விடுவதால் சுற்றுலாப் பயணிகளும் சற்று அச்சமடைந்து வருகின்றனர். எனவே கால்நடைகளை வளர்க்கும் உரிமையாளர்கள் கால்நடைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty