மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது தான் மக்களாட்சி. மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில், ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியாகத் தமிழ் மொழி விளங்குகிறது. எனவே தமிழ் நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டம் 1957 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் தமிழ் மொழிதான் ஆட்சி மொழி என்று உறுதிபடுத்தப்பட்டது.
இதனை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆட்சி வார விழா என்ற தலைப்பில் கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ் வளர்ச்சி துறை சார்பில் உதகையில் நடைபெற்ற தமிழ் மொழி ஆட்சி வார விழாவில் உதகை தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் உதகை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், ஆகியோரை பங்கேற்க வைத்து பேரணி நடத்தப்பட்டது.
இதையும் படிக்க : "இனமென பிரிந்தது போதும்" - 3 மதங்களை சேர்ந்த 400 ஜோடிகளுக்கு ஊட்டியில் திருமணம்!
பேரணியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வணிக வளாகங்களில்: பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் மேலும் அலுவலகங்களில் தமிழ் மொழியை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி உதகை சேரிங் கிராஸ் பகுதியில் பேரணியாக சென்றனர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் அம்ரித் அவர்கள் துவக்கி வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris, Ooty, Tamil language