முகப்பு /நீலகிரி /

மாணவர்களுக்கு மண்பாண்டம் தயாரிப்பு குறித்து செய்முறை விளக்கம்.. உதகை புத்தக கண்காட்சியில் கவனம் ஈர்த்த இளைஞர்!

மாணவர்களுக்கு மண்பாண்டம் தயாரிப்பு குறித்து செய்முறை விளக்கம்.. உதகை புத்தக கண்காட்சியில் கவனம் ஈர்த்த இளைஞர்!

X
மண்பாண்டங்கள்

மண்பாண்டங்கள் செய்தல்

Ooty news | நீலகிரி மாவட்டம் உதகை புத்தகக் கண்காட்சியில் மண்பாண்டங்கள் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை புத்தகக் கண்காட்சியில், மண்பாண்டங்கள் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பண்டைய காலம் முதல் தமிழர்களின் பாரம்பரிய சமையல் முறைக்கு பயன்பட்டு வந்தமண்பாண்டங்கள், தற்போது அழிந்து வருவதாகவும், இதனால்,மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்பாதிக்கப்பட்டுவதாகவும் இந்த தொழிலை செய்துவரும்ஆர்.சுபனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஊட்டி புத்தக கண்காட்சியில் இதற்காக ஒரு ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே,தற்போதுள்ள இளைஞர்களுக்கு மண்பாண்டங்கள் செய்வது குறித்து முக்கியத்துவத்தை உணரவேண்டும் என்ற நோக்கில்,சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.சுபனேஸ்வரன் என்பவர்விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

புத்தகக் கண்காட்சியில் இதுபோல்விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பலதரப்பட்ட மக்களுக்கும் மண்பாண்ட உபயோகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புத்தக கண்காட்சிக்கு வந்தசிறுவர்கள்,சிறியவகை மண்பாண்டங்களை அவருடன் சேர்ந்து செய்து அசத்தினர்.

First published:

Tags: Local News, Nilgiris, Ooty