முகப்பு /நீலகிரி /

இந்த நாயின் விலை ரூ.80 ஆயிரம்..! அமெரிக்கன் காக்கர் நாய் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்..!

இந்த நாயின் விலை ரூ.80 ஆயிரம்..! அமெரிக்கன் காக்கர் நாய் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்..!

X
அமெரிக்கன்

அமெரிக்கன் காக்கர் நாய்

American Cocker Spaniel | உதகை நாய் கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அமெரிக்கன் காக்கர் நாய் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 500 வருடம் பழமையான அமெரிக்கன் காக்கர் ஸ்பெனியல் நாய், காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நாய் உடல் முழுவதும் முடிகளை கொண்ட அழகிய தோற்றத்தில் காட்சியளித்து வருகிறது.

இந்த நாயை பற்றி கோவையை சேர்ந்த அதன் உரிமையாளர் நிதின் கூறுகையில், “இந்த நாயை பராமரிப்பதற்கு அதிக அளவு செலவீனம் தேவைபடும். இந்த நாய்களுக்கு தலையில் முடிகள் அதிக அளவு வளரும். தொடர்ந்து அவற்றை பராமரிக்க வேண்டும். இந்த வகை நாய்களுக்கு அதிக அளவு சதை பிடிப்பு இருக்கும். இந்த நாய்களுக்கு முடிகளை அழகுபடுத்த வேண்டும்.

அமெரிக்கன் காக்கர் நாய்

மேலும் அதிக அளவு நீர் நிறைந்த பகுதிகளில் இந்த நாய்களை விட கூடாது. இந்த நாய் அனைவருடனும் சகஜமாகவும் பழக கூடிய நாய்.

இந்த நாயின் விலை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விற்பனையாகிறது” என அவர் தெரிவித்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty