முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் பராமரிப்பில்லாமல் காட்சியளிக்கும் அம்பேத்கர் பூங்கா.. சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்?

ஊட்டியில் பராமரிப்பில்லாமல் காட்சியளிக்கும் அம்பேத்கர் பூங்கா.. சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்?

X
ஊட்டியில்

ஊட்டியில் பராமரிப்பில்லாமல் காட்சியளிக்கும் அம்பேத்கர் பூங்கா

Ooty Ambedkar Park | நீலகிரி மாவட்டம் ஊட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பல்வேறு பூங்காக்கள், சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அமைந்துள்ளன. மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே பூங்காக்கள் பொதுமக்கள் ஓய்வெடுப்பதற்காகவும், நடைப்பயிற்சிக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி சேரிங்கிராஸ்பகுதியில் உள்ள எச்.ஏ.டி.பி. சாலையோர பூங்கா, காந்தல் பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு பூங்கா மற்றும் மத்திய பேருந்து நிலையம் அருகே இருக்கும் அம்பேத்கர் பூங்கா உள்ளிட்ட சாலையோர பூங்காக்களில், தற்போது நேரு பூங்கா மட்டுமே உபயோகத்தில் இருக்கிறது.

இந்நிலையில், மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் பூங்கா பராமரிப்பின்றி முற்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இந்த பூங்காவை பராமரித்து மேம்படுத்தினால், நடைப்பயிற்சியில் ஈடுபடுவோருக்கும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் ஓய்வெடுக்கவும் பூங்கா பயனுடையதாக இருக்கும். எனவே, இந்த பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

First published:

Tags: Local News, Nilgiris