முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் ஒரு ரகசிய கிராமம்.. பைக் ரைடர்ஸின் Favourite ஆன இந்த ஸ்பாட்ட மிஸ் பண்ணிடாதீங்க!

ஊட்டியில் ஒரு ரகசிய கிராமம்.. பைக் ரைடர்ஸின் Favourite ஆன இந்த ஸ்பாட்ட மிஸ் பண்ணிடாதீங்க!

X
ஊட்டியில்

ஊட்டியில் ஒரு ரகசிய கிராமம்

Kinnakorai Road Trip | நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் கிண்னகொரை வரை செல்லக்கூடிய சாலை ஆனது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கிண்னகொரை. உதவியின் கடைசி கிராமம் என்றே சொல்லலாம் இந்த கிராமம் அழகிய காட்சி முனைகளைக் கொண்ட கிராமமாக அமைந்துள்ளது இங்கு செல்ல வேண்டும் என்றால் உதகையிலிருந்து இரண்டு வழித்தடங்கள் உள்ளது.

உதகை முத்தொரை பாலடா வழியாகவும் மற்றொரு வழியாக லவ்டேல் அதிகரட்டி உள்ளிட்ட பாதைகள் அமைந்துள்ளது. மஞ்சூர் முதல் கிண்னகொரை வரை செல்லக்கூடிய சாலை ஆனது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மேலும் இங்கு அமைந்துள்ள தாய் சோலை தேயிலை தோட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மலைகளுக்கு மேல் அமைந்துள்ள தேயிலை தோட்டங்கள் பார்ப்போரை பிரமிக்கவைக்கும். மேலும் தேயிலை தோட்டங்களை கடந்த பின்னர் முற்றிலும் வனப்பகுதிக்குள் சாலை செல்வதால் மிகவும் திரில்லிங்கான பயணமாகவே அமையும். அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சாலை என்பதால் புதிதாக மலைப்பாதையில் பயணம் செய்வோர் இப்பகுதிகளில் வாகனங்களை கவனத்துடனே இயக்க வேண்டும். மேலும் இங்கு அரசு பேருந்து நாள் ஒன்றுக்கு நான்கு முறை இயக்கப்பட்டு வருகிறது.

எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு கிராமங்களில் ஒரு கிராமத்தில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் கிண்னகொரை எனும் கிராமத்தில் இருந்து பார்த்தால். கேரள மாநிலத்தின் அமைந்துள்ள அட்டப்பாடி கிராமத்தின் அழகிய காட்சி முனை இங்கு தெரியும். இந்த கிராமத்தை அடுத்துள்ள இரிய சீகை எனும் கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டியதாக உள்ளது எனவே இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கிண்னகொரை கிராமம் வரை வந்து அழகை ரசித்து விட்டு செல்லலாம்.

First published:

Tags: Local News, Ooty, Tourist spots