முகப்பு /நீலகிரி /

ஊட்டி சாலையில் மலைப்போல் குவிந்த உப்பு..!

ஊட்டி சாலையில் மலைப்போல் குவிந்த உப்பு..!

X
ஊட்டி

ஊட்டி சாலையில் மலைப்போல் குவிந்த உப்பு 

உதகை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் மலை போல் குவிந்திருந்த உப்புகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள் 

  • Last Updated :
  • Tamil Nadu, India

உதகையில் பிரசித்த பெற்ற கோவிலான மாரியம்மன் கோவில் அமைந்துள்ள மார்கெட் மத்திய பகுதியில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று முடிந்தது. நகரின் பிரதான வீதிகள் வழியாக உலா வந்த தேர் பவனியை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

திருவிழாவை அடுத்து நகரின் பல்வேறு பகுதிகளை சுற்றிலும் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. அம்மனை காண தேர்பவனிக்கு வரும் பக்தர்கள் தாங்கள் செய்த பாவங்கள் தீரும் என்ற நம்பிக்கையில் தேர் பவனின் மேல் உப்பு வீசி வழிபடுவது வழக்கம்.

மேலும் தேர் பவனியின் சக்கரங்கள் உப்பின் மீது ஏறி நசுங்குவது போல தாங்கள் செய்த பாவங்களும் அழியும் என்று ஐதீகம் இருந்து வருகிறது அந்த வகையில் தேரின் முன் வீசப்பட்ட உப்புகள் நகரின் பல்வேறு பகுதிகளில் மலை போல் குவிந்திருந்தது மேலும் கடைகளில் இருந்த காகிதக் குப்பைகளும் அதிக அளவில் காணப்பட்டது. இதனை சுத்தப்படுத்தும் வகையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அதிகாலை முதல் ஈடுபட்டு நகரை சுத்தப்படுத்தினர் .

மேலும் இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்பவனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உப்பு வீசி வழிபட்டதும் அம்மனுக்காகவும் மக்களுக்காகவும் அதனை தூய்மை செய்வதில் தங்களுக்கு பெருமிதமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்

First published:

Tags: Local News, Nilgiris