வருடத்துக்கு 10 நாட்கள் ‘பீரியட்ஸ்’ விடுமுறை அறிவித்தது ஜொமேட்டோ நிறுவனம்..

ஜொமேட்டோ

பெண் ஊழியர்களுக்கும், திருநங்கைகளுக்கும் வருடத்துக்கு 10 நாள் மாதவிடாய் விடுமுறை அளித்திருப்பதாக ஜொமேட்டோவின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஆன்லைன் உணவு டெலிவரியில் முக்கிய நிறுவனமான ஜொமேட்டோ, பெண் ஊழியர்களுக்கும், திருநங்கைகளுக்கும் வருடத்துக்கு 10 நாள் மாதவிடாய் விடுமுறை அளித்திருப்பதாக ஜொமேட்டோவின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

  ”நம்பிக்கை, உண்மை, ஏற்றுக்கொள்ளல்” என்னும் பண்பாட்டின் வழி இந்த முடிவை அறிவித்திருப்பதாக தெரிவித்த அவர், பெண் ஊழியர்கள் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் மாதவிடாய் நேர சிரமங்களின் போது விடுமுறை எடுக்கலாம் எனவும், அதற்கு ஆண் ஊழியர்களிடமிருந்து எந்த விதமான மோசமான எதிர்கருத்தோ, செயல்பாடுகளோ இருக்கக்கூடாது எனவும் ஜொமேட்டோ தெரிவித்திருக்கிறது. மீறி வார்த்தைகளால், செயல்களால் காயப்படுத்தினால், அதைக்குறித்து புகாரளிக்கவும் ஜொமேட்டோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

  ஜொமேட்டோ


  மாதவிடாய் கால சிரமங்களுக்காக அளிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தனது பெண் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது ஜொமேட்டோ நிர்வாகம்.
  Published by:Gunavathy
  First published: