சிறார்களுக்கு போக்சோ விழிப்புணர்வு மிக முக்கியமானது - குஜராத் நீதிமன்றம்

பதின் பருவத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போக்சோ சட்டம் குறித்தும், பாலியல் அத்துமீறல்களைக் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம் என நாடு முழுவதும் உள்ள அரசுகளுக்கு குஜராத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சிறார்களுக்கு போக்சோ விழிப்புணர்வு மிக முக்கியமானது - குஜராத் நீதிமன்றம்
போக்சோ வழக்கு
  • Share this:
பதின் பருவத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போக்சோ சட்டம் குறித்தும், பாலியல் அத்துமீறல்களைக் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம் என நாடு முழுவதும் உள்ள அரசுகளுக்கு குஜராத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த திங்களன்று, பதினெட்டு வயதுக்கு குறைவான சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியின் ஆட்கொணர்வு மனுவை விசாரணையின்போது இதுகுறித்து பேசிய நீதிபதிகள் சோனியா கோகனி, நீதிபதி அஞ்சாரியா ஆகியோர், ”பதினெட்டு வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் இதுபோன்ற பாலியல் ரீதியான குற்றங்கள், சிறுமிகள் மீதான அத்துமீறல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடும்போது, மோசமான சட்ட சிக்கல்களை, தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அவசியம் பதின் பருவத்தினருக்கும், இளம் சிறார்களிடம் போக்சோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மிக அவசியம்” என அரசுகளுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் பார்க்க:-

தஞ்சையில் 15 வயது சிறுமி கர்ப்பம்.. தாத்தா, தந்தை இருவரும் போக்சோ சட்டத்தில் கைது..

பெற்ற மகளுக்கு தூக்க மாத்திரைகள் அளித்து பாலியல் வன்கொடுமை: தற்கொலைக்கு முயன்ற பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில்..

போக்சோ சட்டம் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நோக்கம் கொண்டது எனினும், சிறுவர்களின் மீதான அக்கறையிலும் இது வலியுறுத்தப்படுவதாக நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading