வீட்டிலிருந்தபடியே வேலை.. மாதம் நல்ல வருமானம் கொட்டும் பெண்களுக்கான தொழில்கள்!

வீட்டில் இருந்தபடியே வேலை

மாதம் நல்ல வருமானம் கொட்டும் பெண்களுக்கான சுயத் தொழில் வாய்ப்புகள்.. அதுவும் வீட்டிலிருந்தபடியே வேலை..

 • Share this:
  குடும்பச் சுமைகளை சுமக்கும் பொருட்டு வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டிலிருந்து தனது கனவுகளை தொலைக்கும் பெண்கள் இங்கு ஏராளம். வேலைக்கு சென்றால் 8 மணி நேரம் அல்லது 9 மணி நேரம் செலவிட நேரிடும். இதனால் குடும்ப பொறுப்புகளை துறக்க நேரிடும் அல்லது வேலைக்கு செல்வதை கணவர் விரும்ப மாட்டார் என காரணங்களை எண்ணி உங்களுக்கான சுய வாழ்வை இழந்து விடாதீர்கள்.

  முழு நேரம் வேலை இல்லை வீட்டிலேயே இருந்து செய்யலாம். கை நிறைய பணம் தேவைக்கு அதிகமாகவும் கிடைக்க வாய்ப்புண்டு. இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நீங்க அதை செய்ய ரெடியா?

  அப்படி என்ன வேலைன்னு யோசிக்கிறீர்களா? ஆர்வத்துடன் இந்த பதிவைப் படியுங்கள்.

  1. ஆரி வேலை:

  எம்ப்ராடிங் வொர்க், புடவையில் அச்சு, கலர் சாயம் பூசுவதைக் காட்டிலும் பிளவுஸ்களில் ஆரி வேலைபாடு தான் இன்றைய ஃபேஷன் ட்ரெண்டிங். 3  மாத பயிற்சி சென்றால் போதும். அதுக்கூட வேண்டாம் யூடியூப்பில் ஆரி வீடியோக்கள் என்று போட்டாலே போதும். கண் பார்க்க கை வேலை கற்றுக்கொள்ளும். இதை மட்டும் ஆர்வமாக கற்றுக் கொண்டாலே போது ஒரு பிளவுஸ்க்கு 2000 முதல் 4000 வரை நீங்கள் சம்பாதிக்கலாம். மாதம் 5 பிளவுஸ் போது உங்களுக்கான பண தேவையை நீக்கும்.

  2. மசாலா பொடி:

  இன்றைய காலகட்டத்தில் நம் சமையல் அறையை அதிகமாக ஆக்கிரமித்திருப்பது மசாலா பொடி வகைகள்தான். சாம்பார் பொடி, ரசப்பொடி, மிளகாய்ப்பொடி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். அத்தகைய பொடி வகைகளை நாம் வீட்டிலிருந்தபடியே தரமான முறையில் குறைந்த முதலீட்டில் தயாரிக்கலாம். நம் வீட்டு சமையல் அறை, மளிகைப் பொருட்கள் மற்றும் மிக்ஸி ஆகியவைதான் இதற்கு முதலீடு.

  ஐ.டி. கம்பெனி உள்ளிட்ட கார்ப்பரேட் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மாதம் ஒருமுறை நேரில் சென்று விற்கலாம். தரமானதாக தயாரித்தால் தொடர்ந்து ஆர்டர் உங்களைத் தேடி வரும். போதாத குறைக்கு அமேசான் போன்ற நிறுவனங்கள் உங்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகைக்கு அப்படியே வாங்கி ஆன்லைனில் விற்கிறது. இதுக்குமே வேற என்ன வேணும்.

  3. மருதாணி பொடி:

  மெகந்தி ஃபேஷன் இன்றைய கல்யாண வீடுகளில் ஒரு சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த ஃபங்ஷனுக்கு ஒரு 10 அல்லது 15 மெகந்தி ஆர்டிஸ்களை வரவழைத்து செலவிடுகிறார்கள். அவர்களுக்கு ரியல் மருதாணி பொடி,ஹேனா, கோன்களை வீட்டில் இருந்தப்படியே தயாரித்து கொடுத்தால் போதும். மாதம் 15000 முதல் 2000 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

  குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்து ஒப்படைக்க வேண்டும். தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை உங்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டால் போதும் நீங்கள் உங்கள் கனவுகளை எட்டலாம். அதற்கு சிறியதொரு ஆரம்பம் தான் இதுப்போன்ற சுயதொழில்கள்.
  Published by:Sreeja
  First published: