5 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் அசத்தும் பெண்..!

கவிதா மற்ற விவசாயிகளுக்கும் பயன்பட வேண்டுமென்ற நோக்கத்தில், வேளாண்துறை விதை பண்ணைகளுக்கு விற்பனை செய்கிறார்.

  • Share this:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா, இயற்கை முறை விவசாயத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. அரசு ஊழியரான இவரின் கணவர் வெளி மாவட்டத்தில் வேலை செய்து வருகிறார். எனவே, தங்களுக்கு உள்ள ஐந்தரை ஏக்கர் நிலத்தில் கவிதாவே முன் நின்று விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். வழக்கமான ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வந்த கவிதா, இயற்கை வேளாண்மை பற்றிய கூட்டத்திற்கு சென்றுள்ளார். அதில் ஈர்க்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்.

முதலில் விதை, பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சுவிரட்டி, நுண்ணூட்டச்சத்து தெளிப்பான், இடுபொருள் போன்றவற்றை இயற்கை விவசாயம் செய்யும் பிற விவசாயிகளிடம் விலைக்கு வாங்கிய கவிதா, பின்னர் அதன் செய்முறைகளை அறிந்து கொண்டு, தனது சாகுபடிக்கு தேவையானவற்றை தானே செய்து கொள்கிறார். இதனால் உரங்களுக்கு செலவிடும் தொகை மிச்சமாகி, லாபம் கிடைப்பதோடு, உடலுக்கு தீமை தராத பொருட்களை விளைவிக்க முடியும் என்கிறார் இந்த விவசாயி.


தனது நிலத்தில் விளைந்த விளைபொருட்களுக்கு அதிகம் லாபம் கிடைக்கவேண்டும் என்பதற்காக சந்தையிலோ, சில்லறை விலைக்கோ, கவிதா விற்பதில்லை. மற்ற விவசாயிகளுக்கும் பயன்பட வேண்டுமென்ற நோக்கத்தில், வேளாண்துறை விதை பண்ணைகளுக்கு விற்பனை செய்கிறார்.

தனது குடும்ப தேவைக்காக சிறிய பாத்திரத்தில் காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை பயிரிடும் இவர், 4 ஆண்டுகளாக வெளியில் இருந்து காய்கறி வாங்குவதே இல்லையாம். திராட்சை, சப்போட்டா, மா உள்ளிட்ட பழ மரங்களையும், உளுந்து ,கொண்டைக்கடலை என அனைத்து தானிய வகைகளையும் ஊடுபயிர் செய்து வரும் கவிதா, இயற்கை விவசாய பொருட்களை தேடி வருபவர்களுக்கு விற்பனை செய்கிறார்.
First published: March 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading