ஹோம் /நியூஸ் /மகளிர் /

மகப்பேறு விடுப்பில் இருந்த பெண்ணை பணிநீக்கம் செய்த ஃபேஸ்புக் நிறுவனம்!

மகப்பேறு விடுப்பில் இருந்த பெண்ணை பணிநீக்கம் செய்த ஃபேஸ்புக் நிறுவனம்!

குழைந்தையுடன் அணீகா படேல்

குழைந்தையுடன் அணீகா படேல்

Facebook | ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கு வருமான இழப்பு ஏற்படுவதைத் தொடர்ந்து ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும் சூறாவளி, மழை வெள்ளம் ஏற்படுகிறது என்றால் தயவு, தாட்சன்யம் இன்றி எல்லோரும் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதைப் போல இருக்கிறது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணியாளர்களின் வாழ்க்கை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்களில் தற்போது பாரபட்சம் இன்றி ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இந்த இரண்டு நிறுவனங்களிலும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரும், அமெரிக்கப் பணியாளர்களும் கூட பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கு வருமான இழப்பு ஏற்படுவதைத் தொடர்ந்து ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டு நிறுவனங்களிலும் பணிநீக்கம் செய்யப்படுகின்ற பணியாளர்களுக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம், 6 மாதங்களுக்காக மருத்துவக் காப்பீடு போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றாலும், வாழ்வின் முக்கிய தருணத்தில் இருக்கும் தாய்மார்களையும் கூட இந்த பணிநீக்க சூறாவளி விட்டு வைக்கவில்லை.

Read More : போன் பண்ணி தொல்லை தரக் கூடாது.. மணமகளுக்கு நூதன ஒப்பந்தம் போட்ட மணமகனின் நண்பர்கள்

கேள்விக்குறியாகும் புதிய தாய்மார்களின் வாழ்க்கை

டிவிட்டர் நிறுவனத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டதும், அறிவிப்பு வருவதற்கு முந்தைய நாள் இரவே அவரது அலுவலக லேப்டாப் லாக் செய்யப்பட்டதும் அண்மையில் தெரிய வந்தது. தற்போது ஃபேஸ்புக் நிறுவனமும் மகப்பேறு விடுப்பில் உள்ள அணீகா படேல் என்ற பெண்ணை பணிநீக்கம் செய்துள்ளது. இவர் தற்போது 3 மாத கைக்குழந்தைக்கு தாயாக உள்ளார்.

மொத்த பணியாளர்களில் 11 ஆயிரம் ஊழியர்களை, அதாவது 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் அறிவித்தது. ஃபேஸ்புக்கில் வேலை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடனே பணியில் சேர்ந்த அணீகா படேலின் வேலையும் பறிபோயுள்ளது.

Read More : ட்விட்டர் இந்திய அலுவலகத்தில் மொத்தமே 12 ஊழியர்கள்தான் வேலையில் உள்ளனர்...

இதுகுறித்து, அவர் கூறுகையில், “ஃபேஸ்புக் நிறுவனம் பணிநீக்கம் செய்த 11 ஆயிரம் ஊழியர்களில் நானும் ஒருவர் என்பது இன்று காலையில் தான் எனக்கு தெரியும். மகப்பேறு விடுப்பில் இருக்கும் எனக்கு இது கடுமையான பின்னடைவு ஆகும். மெயிலை பார்த்ததும் இதயமே நின்றுவிடும் போல இருந்தது.

மெட்டா நிறுவனத்தில் பணியாற்றும் நோக்கத்தில் தான் லண்டனில் இருந்து பே பகுதிக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு வந்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகள் ஃபேஸ்புக் குழும ப்ராடக்டுகளுக்காக பணியாற்றியது உண்மையில் நம்ப முடியாத அனுபவமாக இருக்கிறது.

பணிநீக்கம் செய்த போதிலும், தனக்கு வாய்ப்பு அளித்த மெட்டா நிறுவனத்திற்கு அணீகா படேல் நன்றியை தெரிவித்துள்ளார். அதே சமயம், இனி அடுத்த ஆண்டில் இருந்து வேலைக்கு சேர விரும்புவதாகவும், நல்ல வேலையை பரிந்துரை செய்யுமாறு சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Business, Facebook