பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்?

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள், பணியிட நிபந்தனைகளை நிறைவேற்றக்கோரி 1908-ம் ஆண்டு நியூயார்க் நகரில் மிகப்பெரும் போராட்டம் நடத்தினர்.

பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்?
Representative image. (Photo courtesy: AFP)
  • News18
  • Last Updated: March 7, 2020, 7:59 PM IST
  • Share this:
தடைகள் பல தாண்டி சாதனைகள் படைத்து வரும் ஒவ்வொரு பெண்ணையும் கொண்டாடும் வகையில் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பெண்கள் தினம் என்பது கடந்த 20-ம் நூற்றாண்டில் வட அமெரிக்காவின் தொழிலாளர்கள் இயக்கங்கள் கொண்டு வந்த ஒரு கொண்டாட்ட நாள் ஆகும். வட அமெரிக்கப் பகுதிகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்கான தினம் பணியிடங்களில் கொண்டாடப்பட்டன.

அதன் பின்னர் 1909-ம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலாக பிப்ரவரி 28-ம் தேதி அந்நாட்டின் தேசிய பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டது. இதுதான் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்ட பெண்கள் தினம்.


ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள், பணியிட நிபந்தனைகளை நிறைவேற்றக்கோரி 1908-ம் ஆண்டு நியூயார்க் நகரில் மிகப்பெரும் போராட்டம் நடத்தினர்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் நடத்திய அந்தப் போராட்டம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போராடிய பெண்களை கவுரவிக்கும் வகையிலேயே பெண்கள் தினம் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் மார்ச் 19-ம் தேதியை பெண்கள் தினமாக அறிவித்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷ்யாவில் பெண்கள் இணைந்து பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.க்ரிகோரியன் காலண்டரின் அடிப்படையில் அப்பெண்கள் கோரிய ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8-ம் தேதியாக இருந்ததால் 1917-ம் ஆண்டு முதல் மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின்னர் 1975-ம் ஆண்டு முதல் சர்வதேச பெண்கள் தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐநா கொண்டாடி வருகிறது.

மேலும் பார்க்க: ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருபாய் அம்பானி சதுக்கத்தை தொடங்கி வைத்தார் நீட்டா அம்பானி
First published: March 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading