பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரிசீலனை செய்ய குழு அமைப்பு - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு குறைந்தபட்ச திருமண வயதைக் குறித்து முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு அது குறித்து முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  74-வது சுதந்திர தினமான இன்று, செங்கோட்டையில் கொடியேற்றிய பின்பு உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அட்டை கிடைக்க வழிசெய்யும் ஹெல்த் மிஷனை அறிமுகம் செய்தார். மேலும் பேசிய அவர், “பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு அது குறித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: அனைத்து இந்தியர்களும் உடல்நல அடையாள அட்டை பெறுவார்கள் - பிரதமர் மோடி

  உலகமே, இந்தியா தற்சார்பு கொள்கையை உற்று நோக்கி வருவதாக குறிப்பிட்ட அவர், Vocal for local என்னும் உள்நாட்டு தயாரிப்புகளுக்கான குரல் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உறுதியாக ஏற்க வேண்டும், உள்நாட்டு பொருட்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும். இல்லையெனில் தற்சார்பாக தயாரிக்கப்படும் பொருட்கள் ஊக்கத்தை இழந்துவிடும் என்று தெரிவித்தார். சுதந்திர இந்தியா என்பது தற்சார்பு இந்தியாவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Gunavathy
  First published: