கண்ணீர் மல்க நன்றி கூறிய பெண்... கண்கலங்கிய பிரதமர் நரேந்திர மோடி

என்னை பொறுத்தவரை நீங்கள் கடவுள் போல் தெரிகிறீர்கள். உங்களுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

கண்ணீர் மல்க நன்றி கூறிய பெண்... கண்கலங்கிய பிரதமர் நரேந்திர மோடி
பெண்ணின் பேச்சை கேட்டு கண்ணீர் விட்ட மோடி
  • Share this:
மக்கள் மருந்தக திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, பெண் ஒருவர் தனது வாழ்க்கை சம்பவங்களை கூறியபோது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

மக்கள் மருந்தக வாரம் மார்ச் 1 முதல் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், திட்டத்தின் பயனாளிகளுடன் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது தீபா ஷா என்ற பெண், தனது வாழ்க்கை கஷ்டங்களை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.

அந்த பெண் பேசிய போது, முடக்குவாத்தால் பாதிக்கப்பட்ட மருந்து வாங்க மிகவும் சிரமமப்பட்டேன். மருந்துகளின் விலை அதிகமாக இருந்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டது. இதன்பின் பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ் மருந்துகளை வாங்க ஆரம்பித்தேன்.

அதற்கு முன் 5000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மருந்துகள், இந்த திட்டத்தின் கீழ் பாதியாக குறைந்தது. இதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என்னை பொறுத்தவரை நீங்கள் கடவுள் போல் தெரிகிறீர்கள். உங்களுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

அப்போது, உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய பிரதமர் மோடி, அந்த பெண்ணிற்கு தனது பாராட்டை  தெரிவித்து கொண்டார்.

 
First published: March 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading