பெண்கள் தினத்திலிருந்து விமானத்தில் இலவச நாப்கின்கள்... விஸ்தாரா அறிவிப்பு

விஸ்தாராவின் இப்புதிய வசதி குறித்த விழிப்புணர்வையும் நாளை முதல் விமானங்களில் அறிவிக்க உள்ளது.

பெண்கள் தினத்திலிருந்து விமானத்தில் இலவச நாப்கின்கள்... விஸ்தாரா அறிவிப்பு
விஸ்தாரா ஏர்லைன்ஸ். (Image: Reuters)
  • News18
  • Last Updated: March 7, 2020, 7:59 PM IST
  • Share this:
விமானப் பயணத்தில் பெண்களுக்குத் தேவைப்படும் சூழலில் இலவசமாகவே சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் என விஸ்தாரா விமானப்போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

முதன்முதலாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட முதல் இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனமாக பாராட்டைப் பெற்றுள்ளது விஸ்தாரா நிறுவனம். விமானப் பயணத்தில் வழங்கப்படும் நாப்கின்கள், ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் பெற்றது என்றும், தாவிர வகைப் பொருட்கள், ஆர்கானிக், ப்ளாஸ்டிக் இல்லா, செயற்கை நறுமணம் இல்லா நாப்கின்களே வழங்கப்படும் என்றும்  விஸ்தாரா தெரிவித்துள்ளது.

இப்புதிய வசதி குறித்த விழிப்புணர்வையும் நாளை முதல் விமானங்களில் அறிவிக்கப்பட உள்ளது. “சின்னச்சின்ன விஷயங்களைக் கூட கருத்தில் கொள்ள வேண்டும். அவை ஒரு நாள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எங்களது இந்தப் புதிய முயற்சி வாடிக்கையாளர்கள் மத்தியில் அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒரு பெண்ணாக இம்முயற்சியை எடுத்திருக்கும் எனது நிறுவனம் குறித்து பெருமை அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் விஸ்தாரா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுக்குழு துணைத்தலைவர் தீபா சத்தா.


மேலும் பார்க்க: ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ரகசிய ஆவணங்கள் திருட்டு! மத்திய அரசு அதிர்ச்சி
First published: March 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading