செக்ஸ் குறித்து பெண்களிடம் சொல்லப்படாத சில விஷயங்கள்! தெரிந்து கொள்ளுங்கள்!

செக்ஸ் பற்றிய புரிதல்கள் குறித்து பெண்கள் போதுமான அளவில் தெரிந்து கொள்ள வேண்டும்.

செக்ஸ் பற்றிய புரிதல்கள் குறித்து பெண்கள் போதுமான அளவில் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • Share this:
செக்ஸ் குறித்த பார்வை ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறாக இருக்கும். குறிப்பிட்டு கூறினால் நபருக்கு நபர் மாறுபட்டவையாக இருக்கும். உணர்ச்சியின் அடிப்படையிலும், உடல் தேவையின் அடிப்படையிலும் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். செக்ஸ் குறித்து ஆண்கள் பேசுமளவிற்குகூட பெண்கள் பேசுவதில்லை அல்லது அவர்களுக்காகவே உரையாடுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை சொல்லப்படாத ரகசிய பக்கங்களாக செக்ஸ் இருப்பதால், இது குறித்து அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என சில இருக்கின்றன.

செக்ஸ் உணர்வு:

பெண்களுக்கு வயதுக்கு ஏற்றார்போல் செக்ஸ் உணர்வு மாறுபடும். இளமை ததும்பும் நேரத்தில் ஆதிக்கம் செலுத்தபவராக இல்லாமல் இருக்கும் பெண்கள், வயதாகும்போது வீரியத்துடன், ஆதிக்கம் செலுத்துபவராக மாறுவார்கள். இயல்பான ஒன்று என்றாலும், உங்கள் ஆசைக்கு ஒருபோதும் தடைபோடாதீர்கள். ஏதாவதொரு சில காரணங்களுக்காக உங்கள் ஆசைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாம்.

யாருடன் செக்ஸ்?:

பொதுவாக நெருக்கமாக இருப்பவர்களுடன் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. உங்களுடன் தூங்குபவர்களைக் காட்டிலும், தூரத்தில் இருப்பவர்களை நினைக்கும்போது, அவர்களை கற்பனை செய்யும்போது உங்கள் செக்ஸ் ஆசைக்கு ஒரு பூர்த்தி கிடைக்கும். இதுவரை உடலுறவு வைத்துக்கொள்ளாத ஒருவருடன் இருக்கும்போது கூட உங்களுக்கு முழு திருப்தி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

முதல் செக்ஸ்:

முதன்முறையாக செக்ஸ் வைத்துக்கொண்டவர்கள், உங்கள் வாழ்க்கைக்குரிய நபராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் நடந்த அந்த விஷயங்களை நினைத்து உங்களை காயப்படுத்திக் கொள்ள வேண்டாம். முதல் செக்ஸை மறைத்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியும் தேவையில்லை. செக்ஸ் என்பதை நம்மை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம் என்பதற்கான லைசென்ஸ் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

செக்ஸ் விருப்பம்:

உங்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்பவர்கள், எதிர்பார்க்கும் அளவுக்கு ஈடுகொடுப்பவராக இல்லை என்றால், அதற்காக நீங்கள் கவலைப்படக்கூடாது. உங்களுடைய ஆசை அளவு அதிகமாக இருக்கிறதே என யோசிக்க வேண்டாம். உங்களை திருப்திபடுத்துமளவிற்கான ஆற்றல் அவரிடம் இல்லை என நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதற்கான எதிர்பார்ப்பு ஒன்றும் தவறில்லை. அவரை அதற்கேற்றார்போல் தகுதிபடுத்திக்கொள்ள  சொல்லுங்கள். சுட்டிக்காட்டுதல் இயல்பாக இருக்கட்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செக்ஸ் தற்பெருமை

20 வயதில் இருக்கும் இளம் வயதினரிடையே செக்ஸ் உரையாடல்கள் இருக்கும். நண்பர்கள் சிலர் செக்ஸ் வைத்துக்கொண்டதைப் பற்றி பேசுவார்கள். அவர்களுடைய வார்த்தைகளுக்கு நீங்கள் இரையாக வேண்டாம். உங்களுடைய எண்ணங்களை தூண்டிக்கொள்ளவும் வேண்டாம். உண்மையில் செக்ஸ் வைத்துக் கொள்வதைப் பற்றிய அவர்களின் தற்பெருமையின் காரணமாகவும் கூட பேசலாம். அதனால், நீங்களும் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அதுபோன்ற உரையாடல்களை புறந்தள்ளிவிட வேண்டும்.

செக்ஸ் பற்றிய புரிதல்கள் குறித்து பெண்கள் போதுமான அளவில் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவும் ஒரு விழிப்புணர்வே.
Published by:Archana R
First published: