உலக பெண்கள் தினம் : ”உலகின் எந்த நாட்டிலும் பெண்களுக்கு சம உரிமை இல்லை ” - ஐக்கிய நாடுகள் சபை

உலக பெண்கள் தினம்

உலக அளவில் ஆண் பெண் என 90 சதவீதம் மக்கள் பெண்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர் .

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐக்கிய நாடுகள் ( United Nation) வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் ஆண் பெண் என 90 சதவீதம் மக்கள் பெண்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர் என்று கூறியுள்ளது.

அரசியல் மற்றும் கல்வியில் பெண்களின் நிலைக் குறித்து 75 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு உலக அளவில் 50% ஆண்கள் பெண்களைக் காட்டிலும் தங்களுக்குத்தான் வேலைக்குச் செல்லும் உரிமை இருப்பதாக கூறியுள்ளனர். அதில் சிலர் பெண்களை அடிப்பதும் சரிதான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில் ஜிம்பாவேதான் அதிக அளவிலான பாலின பேதத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில் 0.27% மக்கள் மட்டுமே பாலின பேதம் கிடையாது என்று கூறியுள்ளனர். அதிக பாலின பேதம் இல்லாத நாடாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அண்ட்ரோரா இருப்பதாகவும் 72% மக்கள் பாலின பேதத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாகக் கூறியுள்ளது.அதுமட்டுமன்றி ஜிம்பாவேயில் 96% மக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஆதரவு அளித்து பேசியுள்ளனர். அதோடு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கும் உண்டு என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலையீட்டில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறப்பாகச் செயல்படுவதாகக் கருத்துக்கள் வந்துள்ளன. சீனாவில் 55% மக்கள் அரசியல் என்பது ஆண்களுக்கே பொருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளனட். அமெரிக்காவில் 39% மக்கள் ஆண்கள்தான் சிறந்த அரசியல் ஆளுமைகள் என்று கூறியுள்ளனர்.

அதுமட்டுமன்றி கடந்த ஐந்து ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது அரசியல் நிர்வாகத்தில் பெண் ஆளுமைகள் மிகக் குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளது. தற்போது 193 நாடுகளில் 10 பெண் ஆளுமைகள் மட்டுமே உள்ளதாகவும் கடந்த 2014 வரை 15 பெண்கள் இருந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.நாடாளுமன்ற அவைகளை எடுத்துக்கொண்டால் சற்றே பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்றே கூறியுள்ளது. அதிலும் அமெரிக்கா மற்றும் கரீபியனில் மட்டுமே 31 சதவீதம் அதிக பெண்கள் உள்ளனர். தெற்காசிய நாடுகளில் 17% மட்டுமே உள்ளனர்.

”வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய ஆண் எந்தவிதமான சிக்கல்களை எதிர்கொள்கிறானோ அதே சிக்கல்கள்தான் பெண்களுக்கும் இருக்கும் என்பதை உறுதிய செய்ய பல தசாப்தங்களைக் கடந்து இந்த ஆய்வை நடத்தினோம். ஆனால் இன்றும் ஆரம்ப நிலையில் கண்ட அதே பாலின பாகுபாட்டை உணர முடிந்தது. இன்றும் பாலின சமத்துவத்திற்கான போராட்டங்கள், உறவுகளில் ஆண்களின் அதிகாரத் தலையிடல் இருப்பதை உணர முடிந்தது” UNDP-யின் மனித மேம்பாட்டு அறிக்கை அலுவலகத்தின் தலைவர் பெட்ரோ கான்சீனோ கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க வேலைக்குச் செல்லும் இடங்களிலும் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் குறைந்த ஊதியத்துடனும், தலைமைப் பொருப்புகளில் குறைந்த அளவே பெண்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் 40% மக்கள் பெண்களைக் காட்டிலும் ஆண்களே தொழில்துறையில் சிறந்தவர்கள் (business executives) என்று கூறியுள்ளனர்.

இதில் இங்கிலாந்தில் 25% மக்களும் இந்தியாவில் 69% மக்களும் ஆண்களே சிறந்த தொழில் முணைவோர்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆண்களுக்கே வேலைக்குச் செல்லும் உரிமை அதிகம் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

மொத்தத்தில் ஒட்டுமொத்த கருத்துக்களின் அடிப்படையில் உலகின் எந்த நாட்டிலும் பாலின சமத்துவம் இல்லை என்று கூறியுள்ளது.

இந்த அறிக்கையாலும் தொய்வு அடைய வேண்டாம். பாலின பேதத்தை தகர்க்க கூடுதலாக பணியாற்ற வேண்டியது அவசியம். விரைவில் பாலின பேதத்தை வெற்றி காண்போம். அதற்கு அனைவரும் தீவிரமாகக் களம் இறங்க வேண்டும் என்று UNDP-யின் பாலின அணி செயல் இயக்குனர் ராகல் லகுனாஸ் கூறியுள்ளார்.

 

 
Published by:Sivaranjani E
First published: